லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மியூசிக் வீஜேக்களில் பிரபலமான சிலரில் வீஜே தியா மேனனும் ஒருவர். தொடர்ந்து, எம்சி ஆக பல சினிமா ஈவண்ட்களையும், கமர்ஷியல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். 'சூப்பர் சேலஞ்ச்', 'சவாலே சமாளி' ஆகிய நிகழ்ச்சிகள் இவர் தொகுத்து வழங்கியதில் சூப்பர் ஹிட்டானவை. 2016 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் கார்த்திக் சுப்பிரமணியம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட தியா மேனன் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டார். அதன்பிறகு படிப்படியாக டிவி நிகழ்ச்சிகளிலிருந்தும் ஒதுங்கிவிட்டார். ஆனாலும், இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட், ரீல்ஸ் வீடியோ என தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது தியா மேனன் தான் கர்ப்பாமாக இருப்பதை தெரிவித்துள்ளார். தியா மேனனை, அவரது கணவர் பாசமாக கட்டியணைக்கும் போட்டோவுடன், 'இரண்டு பிஞ்சு கால்களுடன் எங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் வர உள்ளதை உங்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார். இந்த இனிப்பான செய்தியை சொன்ன தியாவை சீரியல் நடிகர்கள் உட்பட டிவி பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.