ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக அறிமுகமானவர் சிவாங்கி. இன்று விஜய் டிவியின் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும், ஆங்கர், சிங்கர், எண்டர்டெயினராக கலந்து கொண்டு தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார் என்றே சொல்லலாம். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தால் சிவாங்கிக்கு சினிமாவில் பின்னணி பாடவும், நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது சினிமாவில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வரும் சிவாங்கி, ஹீரோயின்களுக்கே உண்டான தோரணையில் போட்டோஷூட்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அண்மையில் டான் பட விழாவில் வெள்ளை நிற டிசைனர் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்துவிட்டு பலரும் க்யூட்டி, ப்யூட்டி, ஸ்வீட்டி என லைக்குளையும் ஹார்டின்களையும் அள்ளிக் குவித்து வருகின்றனர்.