ஜான்சி ராணி ரோலில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரச்சிதா | திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள் | டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் | வெந்து தணிந்தது காடு 2வது பாடல் ஆக.,14ல் வெளியாகிறது | அஜித்தின் 61வது படம் வல்லமை : நாளை போஸ்டர் வெளியாகிறது? |
சின்னத்திரை பிரபலங்களான தாடி பாலாஜி, நித்யா ஆகியோரின் குடும்ப பிரச்னை தான் இணையத்தில் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. இருவரும் மாறி மாறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். பிக்பாஸ் மூலம் பிரபலமான நித்யா, பிக்பாஸ் ஷோவினை தொகுத்து வழங்கிய இரண்டு நடிகர்களை ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர், நடிகர் கமல்ஹாசனை 'வொர்ஸ்ட் கேரக்டர்' என விமர்சித்தும், நடிகர் சிம்புவை தங்கமான மனிதர் என புகழாராம் சூட்டியும் பேசியுள்ளார்.
சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் நித்யா பேசிய போது, 'பிக்பாஸ் முடிந்ததும் கமல்ஹாசன் மது விருந்து வைத்தார். அதில் பாலாஜி என்னிடம் சொல்லாமலேயே வந்தார். அங்கே அவர் கமல்ஹாசன் முன் நல்லவர் போல் நடித்தார். அப்போதே இதைப்பற்றி கமல்ஹாசனிடம் பேச முற்பட்டேன். மக்கள் நீதி மய்யத்திற்காக மிகவும் உழைத்தேன். ஆனால், அவர் என்னிடம் பிரச்னை குறித்து எதையும் கேட்க தயாராக இல்லை. தன் கட்சியில் இருக்கும் பெண்ணின் பிரச்னையே அவரால் தீர்த்து வைக்க முடியவில்லை. அவரா மக்கள் பிரச்னையை தீர்ப்பார்.
மக்கள் நீதி மய்யத்தில் எந்த நீதியும் இல்லை. மீடியாவில் இருந்து என்னிடம் பேசிய ஒரே நபர் சிம்பு மட்டும் தான். முதலில் அவர் கால் செய்தபோது யாரோ மிமிக்ரி செய்து விளையாடுகிறார்கள் என்று நினைத்து கட் செய்தேன். ஆனால், அவர் வீடியோ காலில் வந்து பேசினார். சிம்பு மிகவும் தங்கமான மனிதர்' என்று அதில் கூறியுள்ளார்.