சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
விஜய் டிவியில் மிக விரைவில் வெளியாகவிருக்கும் புதிய சீரியல் 'சிப்பிக்குள் முத்து'. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்த தொடரில், ராஜ் டிவியின் 'கீதாஞ்சலி' சீரியலில் நடித்து வரும் ஜீவா ஹீரோவாக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைதொடர்ந்து இந்த தொடரில் இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருவதாகவும், இதற்கான புரோமோ ஷூட் கூட சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற லாவண்யா மற்றும் பவ்யாஸ்ரீ ஆகியோர் தான் 'சிப்பிக்குள் முத்து' தொடரில் ஹீரோயின்களாக நடிக்கவுள்ளனர். இதில், பவ்யாஸ்ரீ 'திருமதி ஹிட்லர்' தொடரில் நடித்து பிரபலமானவர். ஆனால், லாவன்யா சின்னத்திரையில் முதன்முதலாக ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.