நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
இன்னும் சில நாட்களில் காதலர் தினம் வரவுள்ள நிலையில் எங்கும் காதல் பற்றிய பேச்சே உள்ளது. நேயர்களின் மனதை புரிந்து கொண்ட ஜீ தமிழ் தொலைக்காட்சி இரண்டு இன்ப அதிர்ச்சிகளை தர உள்ளது. முதலாவதாக வரும் பிப்ரவரி 13ல் 1:30 மணிக்கு, 'காதல் சங்கமம்' - காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பவுள்ளது. இந்த 2 மணிநேர சிறப்பு நிகழச்சியில் செம்பருத்தி, சத்யா மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆகிய தொடர்களை சேர்ந்த ஜோடிகளின் காதல் கதைகள் காட்டப்படவுள்ளன.
இந்த புதுமையான நிகழ்ச்சி, ஒவ்வொருவரும் அவர்களது அன்பிற்குரியவரின் உறவினை, அன்பு மற்றும் நம்பிக்கையின் மூலம் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்து சொல்லும். மேலும் தங்களது ஜோடியிடம் உள்ள குறைகளை அடையாளம் காண்பதையும்; தவறுகளை சரி செய்து, முன்பு இருந்ததை விட ஜோடிகள் ஒற்றுமையாக மாறுவதையும், இந்த நிகழ்ச்சியில் காணலாம்.
தொடர்ந்து பிப்., 13, பிற்பகல் 3:30 மணியளவில் காதல் திரைப்படமான ஸ்ரீதேவி சோடா சென்டர் ஒளிபரப்பாகவுள்ளது. சூரி (சுதீர் பாபு) மற்றும் ஸ்ரீதேவி (ஆனந்தி) ஆகியோரது இந்த காதல் காவியம் அனைவரது மனதையும் தொடும். காதல் கதையுடன் சமூகத்தில் வேர்விட்டு வளர்ந்துள்ள சாதி பிரச்சனைகளையும், இதயத்தை படபடவைக்கும் உண்மைகளையும் வெளிபடையாகக் காட்டியுள்ள இந்த படம். இறுதியில் வெல்வது காதலா அல்லது சாதி வேறுபாடுகளா என்பதை பரபரப்பான கதையில் காணலாம்.
நினைத்தாலே இனிக்கும், சத்யா மற்றும் செம்பருத்தி ஆகிய தொடர்களின் 'காதல் சங்கமம்' மற்றும் ஸ்ரீதேவி சோடா சென்டர் படம், சிறப்பு நிகழ்ச்சியுடன் ஜீ தமிழ் டிவியில் காதலர் தினத்தை கொண்டாட காணத்தவறாதீர்கள்.