ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
விஜய் டிவி ஹிட் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சமீபத்தில் தொடரின் டிஆர்பியை கூட்டும் வகையில் சமகால பிரச்னையை கையில் எடுத்து பேசுகிறோம் என்ற பெயரில், பள்ளிகளில் பெண் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்து படமாக்கி வருகின்றனர். இதற்காக பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் அண்மையில் ப்ரணிகா நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலின் காரணமாக அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வது ப்ரோமோவில் காட்டப்பட்டது. இதற்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், முகமது கோஷ் என்பவர் இது போன்ற காட்சிகளை சீரியலிலிருந்து நீக்க வேண்டும் என காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், 'பொதுவாகவே தற்கொலை என்பது தவறான ஒன்று. அதிலும் பள்ளி படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்வது மிக மிக தவறு. எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதை நாம் பிள்ளைகளுக்கு வலியுறுத்தி சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் இதுபோன்று நடக்கும் பாலியல் கொடுமைகளை பற்றி தைரியமாக பெற்றோர்களிடமும் சொல்லவில்லை என்றால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து இருக்கோம். இந்த சூழலில் பாலியல் தொல்லை காரணமாக ஒரு பெண் தற்கொலை செய்துகொள்வதாக சீரியலில் காட்டியிருக்கிறார்கள். இது மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.