நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழ்நாட்டின் நம்பர் 1 பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ரசிகர்களை மிகவும் கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிக விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. நேற்று, குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ புரமோ வெளியானது. 'சொல்லு சொல்லு' என தொடங்கும் இந்த புரமோ ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
இந்நிலையில் சேனலின் புரோமோவுக்கு போட்டியாக வீஜே மணிமகேலை தனது வெர்ஷனில் ஒரு புரோமோவை ரீல்ஸில் ரிலீஸ் செய்துள்ளார். அதில், தனது பிஎம்டபிள்யூ காரில் வந்திறக்கும் மணிமேகலை இரண்டு கூலிங்க்ளாஸை போட்டுக்கொண்டு கெத்தாக நடந்து செல்கிறார். இது பார்ப்பதற்கு காமெடியாக இருக்கிறது. அதன்பின் குக் வித் கோமாளி ஷூட்டிங் செட்டுக்குள் சக போட்டியாளர்களுடன் சேர்ந்து கொண்டு, ஜட்ஜூகளுடன் அவர் செய்கின்ற சேட்டையை வீடியோவாக எடுத்து அதை அழகிய புரோமோவாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களை இந்த வீடியோ வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரிஜினல் சேனல் புரோமோவை விட உங்க புரோமோ சூப்பர் என பாராட்டி வருகின்றனர்.