நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் டிவியில் நடிகர் ரஞ்சித், ஸ்ரீ நிதி, ப்ரியா ராமன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்த தொடர் செந்தூரப்பூவே. 200 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், ப்ரியா ராமன் வருகைக்கு பிறகு விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் காரணமாக சீரியல் ஒளிபரப்புவதற்கான டைம் ஸ்லாட் கிடைக்காமல் சில சீரியல்கள் முடித்து வைக்கப்பட்டன, சில சீரியல்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டன. தற்போது பிக்பாஸ் 5 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நிறுத்தி வைக்கப்பட்ட சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது. அந்த வகையில் செந்தூரப்பூவே தொடரின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனை அந்த சீரியலின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மிக விரைவில் சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகும் தேதி, நேரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.