9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

விஜய் டியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்த சமீரா, அதே சீரியலில் ஜோடியாக நடித்த சையத் அன்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர்களுக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சிலர் மோசமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், 'குழந்தைக்கு பால் கொடுப்பதை கேமரா முன்னால் காட்ட வேண்டாம். பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது' என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள சமீரா, 'அது எப்படி அருவருப்பா இருக்கும்? பால் கொடுப்பதை ஏன் சாதரண விஷயமா பாக்க மாட்றீங்க. சின்ன குழந்தைக்கு உணவளிப்பது அருவருப்பா? உங்கள பாத்தா எனக்கு பாவமா இருக்கு' என்று கூறியுள்ளார். மேலும், இது போன்ற நெகடிவ்வாக கமெண்ட் அடிக்கும் பலரையும் தனது ஸ்டைலில் சமீரா வெளுத்து வாங்கி வருகிறார்.