சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
சீரியல் நடிகை ஆல்யாவிடம் அவரது கணவர் சஞ்சீவ் வம்பிழுத்து ரொமான்ஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை ஜோடிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஜோடியாக ஆல்யா - சஞ்சீவ் தம்பதிகள் உள்ளனர். ராஜா ராணி சீரியலில் நடித்த வந்த இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது அய்லா என்ற மகள் உள்ளார். சோஷியல் மீடியாவில் அடிக்கடி ஜாலியாகவும், ரொமான்ஸாகவும் ஏதாவது பதிவுகளை வெளியிட்டு இருவரும் அடிக்கடி டிரெண்டாகி வருகின்றனர்.
அந்த வகையில் ஷூட்டிங் இடைவெளியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆல்யாவை சஞ்சீவ் நன்றாக சாப்பிட சொல்லி கலாய்க்கிறார். அப்போது அவர் 'அய்லா மாதிரி ஒரு லைலா வேணும்' என்று ஆல்யாவிடம் சொல்ல ஆல்யாவிற்கு அது புரியவில்லை. ஆனால், அருகிலிருப்பவர்களுக்கு புரிந்து சிரிக்கிறார்கள். அந்த வீடியோவில் மேலும் அதிகம் சாப்பிட்டால் என்னை போன்ற ஹீரோயின்கள் எப்படி உடம்பை ஒல்லியா எப்படி மெயிண்டெயின் செய்வது என்று ஆல்யா கேட்க, 'அத பத்தி ஹீரோயின் தானே கவல படனும் நீங்க ஏன் பீல் பன்றீங்க' என்று மீண்டும் கலாய்க்கிறார்.
பார்ப்பதற்கு செம க்யூட்டாக இருக்கும் இவர்களது சேட்டையை இணையவாசிகளும் ரசித்து பார்த்துவிட்டு 'லைலா பாப்பாக்கு நாங்களும் வெயிட்டிங்'என கமெண்ட் அடித்து வருகின்றனர்.