Advertisement

சிறப்புச்செய்திகள்

கர்நாடகாவில் 'கேஜிஎப் 2' வசூலை முந்திய 'காந்தாரா' | டிசம்பர் 2 வெளியீட்டில், இரு முனைப் போட்டி மட்டுமே | ஹீரோவுடன் மோதல் : படத்திலிருந்து விலகினார் அனுபமா? | மதுரையில் பட்டிக்காடா பட்டணமா: சிவாஜி ரசிகர்கள் கொண்டாட்டம் | 'யுத்த சத்தம்' படம் தொலைக்காட்சியில் வெளியாகிறது | நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் : தியேட்டருக்கு வெளியே லாபம் பார்த்த தயாரிப்பு நிறுவனம் | பார்த்திபனை நெகிழ வைத்த மும்தாஜ் | முடிவுக்கு வராத 'தனுஷ் என் மகன்' வழக்கு : எல்லா ஆணவங்களையும் தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு | யு டியூப் ரசிகர்களைக் கவர்ந்த 'த வாரியர்' ஹிந்தி | பிரேம்ஜிக்கு ஐபோன் பரிசளித்த யுவன்ஷங்கர் ராஜா : ஏக்கத்துடன் வெங்கட்பிரபு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பெண் வேடம் போட்ட சீரியல் நடிகர் : வைரலாகும் புகைப்படங்கள்

16 அக், 2021 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Serial-actor-in-Lady-getup

சீரியலுக்காக பெண் வேடம் போட்ட நடிகரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் தொலைக்காட்சிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. எனவே அதிக பட்ச சுவாரஸ்யத்துடன் திரைக்கதையை நகர்த்தி செல்ல சீரியல் இயக்குநர்களும் ஏதேதோ மேஜிக்குகளை லாஜிக்கை மறந்து செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் வானத்தை போல தொடர் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக துளசியின் திருமணம் யாருடன் எப்படி நடக்கப்போகிறது என்பதை சில நாட்களாக பல ட்விஸ்டுகளுடன் ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் ராஜபாண்டியுடனான துளசியின் திருமணத்தை நிறுத்த வெற்றி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். இறுதியில் அவர் பெண் வேடமிட்டு சில திட்டங்களை செய்து வருவதாக கதை நகர்கிறது. வெற்றி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வந்த் திலக் இந்த காட்சிகளுக்காக தன் மீசை எடுத்து பெண் போல் வேடமிட்டுள்ளார். பார்ப்பதற்கு அப்படியே பெண் போல் காட்சியளிக்கும் அஸ்வந்த் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் நின்று கொண்டு பெண் போல பாவனைகள் செய்து போட்டோ எடுத்துள்ளார். மேலும் பெண் போல் நடித்த ஷார்ட் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'அய்லா மாதிரி ஒரு லைலா' - ஆல்யாவிடம் ரொமான்ஸ் செய்யும் சஞ்சீவ்'அய்லா மாதிரி ஒரு லைலா' - ... பாவனி ரெட்டியின் அட்மின் வெளியிட்ட வைரல் புகைப்படங்கள் பாவனி ரெட்டியின் அட்மின் வெளியிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in