தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் ஆர்ஜே செந்தில் இரட்டை வேடங்களிலும், அவருக்கு ஜோடியாக ரக்ஷா, ராஷ்மி ஆகியோரும் நடித்து வந்தனர். கொரோனா ஊரடங்கின் போது ஏற்பட்ட சிக்கலால் இந்த தொடர் முடித்து வைக்கப்பட்டு, சீசன் 2-வாக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் செந்தில் - ரச்சிதா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் காமெடி ட்ராக்கில் கலக்கி வந்த ராஜூ பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக முதல் சீசனில் பட்டையை கிளப்பிய சிவகாந்தையே இந்த சீசனிலும் நடிக்க வைக்க சீரியல் குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஆர்ஜே சிவகாந்த் தனது இன்ஸ்டாகிராமில் 'ஐ எம் பேக்' என பதிவிட்டு நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் தான் மீண்டும் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளார். முதல் சீசனில் இவரது காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியருந்ததால் ரசிகர்களும் சிவகாந்தின் வரவேற்பை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.