ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
யூ டியூப்பில் திரைப்படங்களை விமர்சனம் செய்து வரும் புளூ சட்டை மாறன் இயக்கி நடித்துள்ள படம் ஆன்ட்டி இந்தியன். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பிரபலம் மரணம் அடைந்து விடுகிறார். அதையடுத்து இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் போன்ற மத தலைவர்கள் தங்களது மத வழக்கப்படிதான் அடக்கம் செய்ய வேண்டும் என்று வாக்குவாதம் செய்கிறார்கள். அதையடுத்து அது அரசியல் மற்றும் போலீஸ் பிரச்சினையாகிறது. இந்த பிரச்சினைக்கு எந்தமாதிரியான தீர்வு காணப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பதை டிரெய்லரைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த டிரெய்லரில் புளூ சட்டை மாறன் இறந்தவராக நடித்துள்ளார் என்றாலும் ஒரு ஷாட்டில் கூட அவர் வரவில்லை. அதோடு இந்த டிரெய்லரில் மதத்தை நம்புறவன் கோபிக்க மாட்டான். மதத்தை நம்பி பொழப்பு நடத்துறான் பாரு அவன்தான் கோபிச்சுக்குவான் மற்றும் அவர்தான் 25 வருசமா இதோ வர்றேன் அதோ வர்றேன் என்று ரசிகர்களை ஏமாற்றி வருகிறாரே என்பது போன்ற பஞ்ச் டயலாக்குகளும் இடம் பெற்றுள்ளது.