பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! |

சின்னத்திரையில் நாயகன்/ நாயகிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்த வனிதா ஹரிஹரனின் முகத்தை யாரும் மறந்துவிட முடியாது. வெள்ளித்திரையிலும் கால்பதித்த வனிதா 'டார்லிங்' மற்றும் 'செஞ்சிட்டாலே என் காதல' ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மகராசி சீரியலில் ராகிணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் திடீரென தொடரை விட்டு விலகினார். அதன்பின் கணவருடன் பெல்ஜியம் சென்று விட்ட வனிதா தற்போது கர்ப்பமான வயிறுடன் இந்தியா திரும்பியுள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சீரியலில் நடிக்காததற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். அந்த பேட்டியில் வனிதா, 'எங்களுக்கு கல்யாணம் ஆகி 4 வருஷம் ஆகிடுச்சு. என்னுடைய கேரியருக்காக குழந்தை பெத்துக்கிறத கொஞ்சம் தள்ளிப்போட்டோம். இப்ப குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்ததால சீரியலிலிருந்து விலகிட்டேன். நான் நடிச்சிட்டு வந்தது வில்லி கேரக்டர். அது நடிப்பா இருந்தா கூட என்னுடைய குழந்தைய பாதிச்சிடக் கூடாதுன்னு தான் நான் சீரியலிலிருந்து வெளியேறினேன்' என அவர் கூறியுள்ளார்.
வனிதா ஹரிஹரனுக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க ரசிகர்கள் அனைவரும் தற்போது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.