என் மகன்களுக்கு அந்த தைரியம் இல்லை : சிவா ரீமேக் குறித்து நாகார்ஜுனா ஓபன் டாக் | கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் |

சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி நடித்துள்ள படம் ‛உடன்பிறப்பே'. ஜோதிகாவின் 50வது படமாக உருவாகி உள்ள இப்படம் அண்ணன் - தங்கை இடையேயான பாச படமாக, குடும்பங்கள் ரசிக்கும் படமாக தயாராகி உள்ளது. அண்ணனாக சசிகுமாரும், தங்கையாக ஜோதிகாவும், இவரின் கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர். அக்.,14ல் ஓடிடியில் இப்படம் வெளியாகிறது.
ஜோதிகா அளித்த பேட்டி : ‛என் சினிமா பயணம் அழகானது. இந்த நேரத்தில் இரண்டு பேருக்கு நன்றி சொல்லணும். ஒருவர் பிரியதர்ஷன் மற்றொருவர் வசந்த். எதுவும் புரியாத வயதில் சினிமாவுக்கு வந்துவிட்டேன். என் கையை பிடித்துக் கொண்டு சூர்யா அழைத்து போனார். வாழ்கையிலும், சினிமாவிலும் இங்கே நிறைய கற்றுக்கொண்டேன்.
புதிய இயக்குனர்களிடம் நிறைய கதைகள் கேட்டேன். முடிந்தவரை என் படைப்புகளை சிறப்பானதாக கொடுத்து வருகிறேன். பெண்கள் வலிமையானவர்கள், அமைதியானவர்கள், சக்தி படைத்தவர்கள் என இப்படி தான் 90 சதவீத பெண்கள் வாழ்க்கை வாழ்கிறார்கள். பேசுவதை விட மவுனத்தில் தான் சக்தி இருப்பதாக நான் நம்புறேன்..
இந்த படம் எனக்கு புதிதாக இருந்தது. 50வது படமாக உடன்பிறப்பே அமைந்ததில் சந்தோஷம். சசிகுமார் இந்த படத்தில் மட்டுமல்ல நிஜமாகவே சகோதரன் போல் எனக்கு தெரிந்தார். சமுத்திரகனி கூட வேலை பார்த்தது ஒரு சைக்காலஜி மேட்சிங் மாதிரி இருந்தது. சூரி கூட தான் செட்டில் அதிகமாக பேசினேன். எனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்துள்ளார். இந்த படத்தை மக்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்'' என்றார்.