அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா |
விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கங்கனா ரணவத், அரவிந்த்சாமி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் 10ம் தேதி வெளியான படம் 'தலைவி'. மறைந்த முதலமைச்சர், நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்பட்டது. ஆனால், படம் தமிழில் மட்டுமல்ல ஹிந்தி, தெலுங்கிலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தமிழ், தெலுங்கு ஓடிடி வெளியீட்டை படம் வெளியான நாளிலிருந்து நான்கு வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர். அதன்படி அக்டோபர் 10ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு தவிர, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அதே சமயம் ஹிந்தியில் படம் வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகு செப்டம்பர் 25ம் தேதியே ஓடிடியில் வெளிவந்துவிட்டது. தியேட்டர்களில் பார்த்ததை விட ஓடிடி தளத்தில் இப்படத்தை அதிகம் பேர் பார்த்ததாகச் சொல்கிறார்கள். அது போலவே, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களுக்கும் ஓடிடி தளத்தில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.