மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னும் அவர் ஏதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அரசியலில் எம்.ஜி.ஆர் பெயரை தினமும் உச்சரிக்காமல் இருக்க முடியாது. சினிமாவை பொறுத்தவரை எம்.ஜி.ஆரைப்போல உடை அணிந்து அவரைப்போலவே பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பலர் மேடைகளில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வரிசையில் எம்.ஜி.ஆரைப் போன்று உடை அணிந்து வாழ்ந்து, மேடைகளில் ஆடி வரும் நாமக்கல் எம்.ஜி.ஆர் என்ற மேடை நாடக கலைஞர் உழைக்கும் கைகள் என்ற படத்தில் எம்.ஜி.ஆராக நடித்திருக்கிறார். கிரண்மை, ஜாக்குவார் தங்கம், போண்டாமணி ஆகியோர் நடித்துள்ளனர், சங்கர்கணேஷ் இசையமைத்துள்ளார்.
டாக்டர் குமரகுருபரன், சூர்யா தயாரிப்பில் இந்த படம் தயாராகி உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நடந்தது. வேல்ஸ் இன்ஸ்டிடியூட்டின் வேந்தரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் வெளியிட்டு வாழ்த்தினார். தீபாவளிக்கு பிறகுபடத்தினை திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்கள்.