லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் |
தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்தவர் மலையாள நடிகை லிஜோ மோள் ஜோஸ். தற்போது சூர்யா தயாரித்து, நடிக்கும் ஜெய் பீம், மற்றும் தீதும் நன்றும் படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மகேஷிண்ட பிரதிகாரம், ஹனிபீ 2.5, ஸ்ட்ரீட் லைட், பிரேமசூத்திரம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். லிஜோமோள் ஜோஸ் தனது உறவினரான அருண் ஆண்டனியை திருணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் கேரள மாநிலம் வயநாட்டில், கிறிஸ்தவ முறைப்படி எளிமையாக நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.