ஆனந்த ராகம் தொடலிலிருந்து விலகிய ஸ்வேதா | பொங்கல் தித்திப்புடன் இனிப்பான செய்தி சொன்ன சீரியல் நடிகை | திருமணமெல்லாம் எனக்கு செட் ஆகாது - ஷகிலா பளீச் | விஜய் படத்தில் இணைந்த ‛விருமாண்டி' அபிராமி | விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி |
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் மூலம் பார்த்திபனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சந்தோஷ் பிரதாப். அதன்பிறகு தாயம், பயமா இருக்கு, மிஸ்டர்.சந்திரமவுலி, தேவ், ஓ மை கடவுளே உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் சார்பட்டா பரம்பரைதான் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.
தற்போது ஏன் கனவே என்ற மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்திருக்கிறார். இதில் சந்தோஷ் பிரதாப் ஜோடியாக புதுமுக நடிகை சுவதிஸ்டா நடித்திருக்கிறார். உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்யும் புது மண தம்பதிகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் வகையில் இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
யாஞ்சி யாஞ்சி, ராசாளியே, ஆளப்போறான் தமிழன் போன்ற பாடல்களைப் பாடிய சத்யபிரகாஷ் பாடியுள்ளார், ராகேஷ் இசை அமைத்துள்ளார். விஜய் நடித்த ஜில்லா, புலி போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய டி.ஆர்.பாலா இயக்கியிருக்கிறார் . ஆல்பம் ஆயுத பூஜை தினத்தன்று வெளியாகும் என்று குழு அறிவித்துள்ளனர்.