பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நதியா உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது மீண்டும் திரையுலகிலற்கு வந்துள்ள அவர் செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்தவகையில் மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் பீஷ்ம பர்வம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நதியா.
இந்தப்படத்தில் இவருடன் இணைந்து இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மலையாள குணச்சித்திர நடிகை லேனா. நதியாவுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள லேனா, “நதியாவை படப்பிடிப்பு தளத்தில் பார்க்கும்போதெல்லாம் அவரது எக்ஸ்ரே கண்ணாடி காமெடி தான் உடனே ஞாபகத்திற்கு வந்தது.. நல்லிதயம் கொண்ட இந்த ராணியுடன் இணைந்து நடித்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி” என சிலாகித்து கூறியுள்ளார்.
மலையாளத்தில் நதியா நடித்த நோக்கத்தே கண்ணெட்டும் தூரத்து (தமிழில் பூவே பூச்சூடவா) படத்தில் அவர் அணிந்துகொண்டு கலாட்டா பண்ணிய அந்த எக்ரே கண்ணாடி காமெடியைத்தான் லேனா குறிபிட்டுள்ளார்.




