சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

ஈரான் நாட்டைச் சேர்ந்த மரால் யசார்லூ பைக்கில் உலகம் முழுவதும் தனியாக பயணம் செய்துள்ளார். அவர் உலகில் 7 கண்டங்களையும் 64 நாடுகளையும் பார்த்துள்ளார். திருமணம் ஆன பிறகும் கூட அவர் தனியாக பயணம் செய்துள்ளார். அதற்கும் மேல் கர்ப்பமாக இருந்த போது கூட மரால் உலகத்தை சுற்றி வந்துள்ளார். இதுவரை 11000 கிலோமீட்டர் வரை பைக்கில் பயணம் செய்துள்ளாராம்.
சில தினங்களுக்கு அஜித் மற்றும் மராலை சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.தற்போது மரால் அஜித்தைச் சந்தித்தது குறித்து நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.
"என்னை பி.எம்.டபிள்யு கம்பெனி தொடர்பு கொண்டு சக பைக் ரைடர் ஒருவரை சந்திக்குமாறு கேட்டுக் கொண்டனர். நான் அஜித்குமாரை சந்தித்து உலகபயணம் பற்றிய எனது அனுபவங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள தொடர்பு கொண்டோம், நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டோம். இருவரும் சந்திக்க ஏற்ற நேரத்தை நிர்ணயித்தோம். அவர் தென்னிந்தியாவின் பிரபல நடிகர் என்பதை நான் அறிந்துகொள்கிறேன்.அவருக்கு எவ்வளவு புகழ் இருக்கிறது என்பது எங்கள் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகும் வரை எனக்குத் தெரியாது!
நான் பொதுவாக மக்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வேலைகள் இருப்பதாக நம்புவதால் அவர்களின் தொழில் மற்றும் தொழில்களின் அடிப்படையில் நான் அவர்கள் குறித்து தீர்மானிப்பதில்லை. நம்மை ஒரு மனிதனாக வேறுபடுத்துவது என்ன என்பதையே பார்ப்பேன். தல ரசிகர்களுக்காக, உங்கள் பேவரைட் நடிகரின் உடனான எனது அனுபவம் நன்றாக இருந்தது, அவர் அடக்கமானவர், கனிவானவர், மரியாதைக்குரியவர், மிருதுவானவர், மென்மையான மனிதர் மற்றும் சிறந்த மனிதர் மற்றும் அவரை அறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவர் ஒரு நடிகர் என்பதால் அல்ல, அவர் ஒரு சிறந்த நபர் மற்றும் கனிவானவர். அவர் சமூக ஊடகங்களில் இல்லை, இது அவருடைய தனியுரிமையை நாம் மதிக்க வேண்டும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. அவரது அனுமதியுடன் புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன." என்று தெரிவித்துள்ளார்.