'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் நடிகர் விவேக் திகழ்ந்தார்.
இந்நிலையில் நடந்து முடிந்த சைமா விருது விழாவில் 2020-ம் ஆண்டு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது தாராள பிரபு படத்திற்காக விவேக்கிற்கு வழங்கப்பட்டது. அந்த விருதை யோகிபாபு வாங்கிக்கொண்டார்.
தற்போது நடிகர் விவேக்கின் மகள் விருது வாங்கி வீட்டில் வந்து ஒப்படைத்ததற்காக யோகிபாபுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் "தாராள பிரபு படத்திற்காக - 2020ம் ஆண்டில் நகைச்சுவை வேடத்தில் சிறந்த நடிகருக்கான விருதை என் தந்தைக்கு வழங்கியதற்கு நன்றி சைமா. யோகி பாபு அண்ணா அதைப் பெற்று வீட்டிற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி. எப்போதும் போல், ரசிகர்களுக்கு நன்றியும் கடமையும்" என்று தெரிவித்துள்ளார்.