பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

திரெளபதி படத்தை தொடர்ந்து மோகன் ஜி இயக்கி உள்ள படம் ருத்ரதாண்டவம். ரிச்சர்ட், தர்ஷா குப்தா, கவுதம் மேனன், ராதாரவி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மதமாற்றம், சாதிய அரசியல் உள்ளிட்ட பிரச்னைகளை கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. அக்டோபர் 1ல் படம் தியேட்டரில் வெளியாகிறது.
இயக்குனர் மோகன்.ஜி கூறுகையில் ‛‛இந்த படத்தில் ரிச்சர்ட் ஜோடியாக நடிக்க 8 நடிகைகளிடம் பேசினேன். அவர் முன்னணி ஹீரோ இல்லை என்பதால் நடிக்க மறுத்துவிட்டனர். ‛குக் வித் கோமாளி' புகழ் தர்ஷாவின் திறமையை பார்த்து இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கினேன். நான் எதிர்பார்த்த நடிப்பை வழங்கினார். எனது அடுத்த படத்திலும் இவரை நடிக்க வைக்க எண்ணி உள்ளேன். இந்த படத்தில் ராதாரவி - கதவும் மேனன் இடையேயான காட்சிகள் நிச்சயம் வரவேற்பை பெறும். மதமாற்ற பின்னணியில் நடக்கும் சம்பவங்களை இந்த படத்தில் தோலுரித்து காட்டி உள்ளேன்'' என்கிறார்.




