கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி | வெற்றி இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகர் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க இருந்த கதையில் நடிகர் ரஜினிகாந்த் | அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? | 'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் |

கடந்தாண்டு கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் அவர் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருவதை அடுத்து நாகார்ஜூனாவுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார். அதோடு உமா என்ற பாலிவுட் படத்திலும் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அடுத்தபடியாக நடிப்பதற்கு சில புதிய பட வாய்ப்புகள் காஜல் அகர்வாலைத் தேடிச்சென்றபோது அவர் அந்த படங்களை ஏற்கவில்லையாம். காஜல் கர்ப்பமாக இருக்கிறார், அதனால்தான் புதிய படங்களை ஏற்க மறுக்கிறார் என செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து காஜல் வாய் திறக்கும்போதே உண்மையா? இல்லை வதந்தியா? என்பது தெரிய வரும்.




