அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? | ஒரேநாளில் மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் நடித்த படங்கள் | அப்போ தெரியலையா? வனிதாவை வெளுத்து வாங்கிய கஸ்தூரி |
நடிகர் ஆரி அர்ஜூனன் தற்போது காளிங்கன் என்பவர் இயக்கத்தில் பகவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். மித்தாலஜிகல் திரில்லர் வகையில் இப்படம் உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானது. இப்படத்தில் ஆரிக்கு ஜோடியாக 'ரங்கஸ்தலம்' பட நடிகை பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடிக்கிறார். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர் தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இப்போது தமிழில் நாயகியாக களமிறங்கி உள்ளார்.
சமீபத்தில் பகவான் படத்திற்காக கலா மாஸ்டர் நடன அமைப்பில், பிரமாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இப்பாடலுகென்றே 3 நாட்கள் பிரத்யேகமாக பயிற்சிகள் எடுத்து கொண்டு பாடல் காட்சியில் பங்கேற்றுள்ளார் ஆரி. ஆங்கில நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்லனாக நடிக்க, படத்தின் சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. ஜெகன், முருகதாஸ், யோக் ஜேபி, சம்பத் ராம், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, “மாஸ்டர்” பாண்டி, அஜய் தத்தா ஆகியோர் முக்கியபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.