தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வரும் தனுஷ், அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. அதையடுத்து ரங்தே படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்திலும் நடிக்கிறார். இது தனுஷின் இரண்டாவது தெலுங்கு படமாகும். இது குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
இந்த படங்களைத் தொடர்ந்து தனது மூன்றாவது தெலுங்கு படமாக தெலுங்கில் ஆர்எக்ஸ் 100, மகா சமுத்திரம் படங்களை இயக்கிய மகேஷ் பூபதியும் சமீபத்தில் தனுஷை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். அந்த கதையில் நடிப்பதற்கும் தனுஷ் சம்மதம் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. ஆக, அடுத்தடுத்து மூன்று தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடிக்க தயாராகி விட்டார் தனுஷ்.