வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது |

தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் நடிக்கும் இரண்டு நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ்குமார். தான் அதிகப் படங்களில் நடிப்பதாக வரும் செய்திகளைப் பற்றி விஜய் சேதுபதி கூறுகையில், எப்போதோ நடித்த படங்களும் இப்போது வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் நடித்து இப்போது அடுத்தடுத்து வரும் படங்களும் கடந்த ஓரிரு வருடங்களில் ஆரம்பிக்கப்பட்டவைதான்.
நாளை செப்டம்பர் 9ம் தேதி, விஜய் சேதுபதி நடித்துள்ள 'லாபம்' படம் தியேட்டர்களிலும், நாளை மறுநாள் செப்டம்பர் 10ம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்' படம் டிவியில் நேரடி வெளியீடாகவும், அடுத்த வாரம் செப்டம்பர் 17ம் தேதி 'அனபெல் சேதுபதி' படம் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.
இந்த மூன்று படங்களுக்கும் தனது சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து ஊக்குவிக்கும் தகவல்களைப் பதிவிட்டு வருகிறார் விஜய் சேதுபதி. இதன் மூலம் சற்று குழப்பம்தான் ஏற்படும். பொதுவாக முன்னணி நடிகர்கள் அவர்களது படங்களுக்கு இடையில் சீரான இடைவெளியைக் கடைபிடிப்பார்கள். சில முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படத்தில்தான் நடிக்கிறார்கள்.
ஆனால், விஜய் சேதுபதி இப்படி அடுத்தடுத்து அவரது படங்களை வெளியிட வைப்பது அவருக்கும் நல்லதல்ல, சினிமாவுக்கும் நல்லதல்ல என மூத்த திரையுலகப் பிரமுகர் நம்மிடம் கவலைப்பட்டுக் கொண்டார். தனது அபிமான நடிகரை திரையில் பார்க்க ரசிகர்கள் ஏங்க வேண்டும். அதுதான் அவரை இன்னும் அதிகமாக ரசிப்பதற்கான வழியை ஏற்படுத்தும். இப்படி திகட்டும் அளவில் அடுத்தடுத்து படங்களை வெளியிட வைப்பது சரியல்ல என்கிறார்.
எந்த இமேஜும் தனக்குத் தேவையில்லை என நினைக்கும் விஜய் சேதுபதியும் இது பற்றி கவலைப்படப் போவதில்லை. அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்குத்தான் இந்தக் கவலை என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.