பைரசியை விட இவர்களை பார்த்தால் பயமாக உள்ளது : பிரேம் குமார் | செப்டம்பர் இறுதி வார ஓடிடி ரிலீஸ்..... பெரிய லிஸ்ட் இருக்கு....! | நான் அப்படி சொல்லவில்லை : கல்யாணி பிரியதர்ஷன் | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு : அக்., 30ல் தீர்ப்பு | பிளாஷ்பேக் : தாணுவுக்காக கவுரவ தோற்றத்தில் தோன்றிய ரஜினி | ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா? | தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? சாய்பல்லவிக்கு என்னாச்சு? | யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம் | 'அங்காடி தெரு' மகேஷ் நடிக்கும் 'தடை அதை உடை' | ரஜினிகாந்த் மனசு மற்ற ஹீரோக்களுக்கு இல்லையே! |
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. அவரது இசையில் வெளிவந்த கார்த்தி நடித்த படங்களான 'பருத்தி வீரன், பையா, நான் மகான் அல்ல' ஆகிய படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
கார்த்தி அறிமுகமான 'பருத்தி வீரன்' படத்தில் யுவனின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தில் பெரிதும் பேசப்பட்டன. கார்த்தி, யுவன் கூட்டணி கடைசியாக 2013ல் வெளிவந்த 'பிரியாணி' படத்தில் இடம் பெற்றது.
இந்த வருடம் கார்த்தி நடித்து வெளிவந்த 'சுல்தான்' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் பின்னணி இசை அமைத்துக் கொடுத்தார். அப்படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்திருந்தார்கள். இருந்தாலும் ஒரு படத்தின் இசை பற்றி குறிப்பிடும் போது பாடல்களுக்கு இசையமைத்தவர் தான் இசையமைப்பாளர் எனக் குறிப்பிடப்படுகிறார்.
அந்த விதத்தில் எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் இன்று ஆரம்பமான 'விருமன்' படத்தில் கார்த்தி, யுவன் கூட்டணி மீண்டும் முழுமையாக இணைகிறது. இப்படத்தை இயக்கும் முத்தையாவுடன் முதல் முறையாக இணைகிறார் யுவன்.