சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நந்தினி. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிகையாக வலம் வருகிறார். இவரது முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில் யோகேஸ்வரன் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறார்.
இந்நிலையில் பாரம்பரிய உடையில் நந்தினி, யோகேஷ், துருவன் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் லைக்குகளை அள்ளித் தெரித்து வருகின்றனர்.
இதனிடையே மகன் துருவனின் முதல் பிறந்தநாளை நந்தினியும், யோகேஸ்வரனும் இன்று கொண்டாடுகிறார்கள். இதற்காகவும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் விஜய் டிவியின் மிஸ்டர் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடில் தனது காதல் மனைவியின் உருவத்தை நெஞ்சில் டாட்டூவாக குத்தி சர்ப்ரைஸ் கொடுத்தார் யோகேஷ். இதை பார்த்த பலரும் இப்படி ஒரு காதல் ஜோடியா என ஆச்சரியப்பட்டனர். தற்போது இந்த அழகிய குடும்பத்தை பார்க்கு ரசிகர்கள் தங்களது அன்பு மழைகளை பொழிந்து வருகின்றனர்.




