ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
தமிழரசன், காக்கி, அக்னி சிறகுகள், கோடியில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. இந்த படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸாக உள்ளன. முதலாவதாக கோடியில் ஒருவன் படம் செப்., 17ல் ரிலீஸாகிறது. இந்நிலையில் தான் இயக்கும் தனது முதல் படமான பிச்சைக்காரன் 2 படத்தை நேற்று சென்னையில் தொடங்கினார் விஜய் ஆண்டனி. இவரே இதில் நாயகனாக நடித்து, தயாரிக்கவும் செய்கிறார்.
2015ல் சசி இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை படம் பிச்சைக்காரன். இப்படத்தை தெலுங்கிலும் பிச்சைக்காடு என்ற பெயரில் வெளியிட்டனர். அப்படம் தமிழை விட அதிகப்படியாக வசூலித்து தெலுங்கு சினிமாவில் விஜய் ஆண்டனியை பிரபலப்படுத்தியது. அதனால் தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு ரசிகர்களையும் கருத்தில் கொண்டு பிச்சைக்காரன் 2 படத்தை உருவாக்க உள்ளார் விஜய் ஆண்டனி. அடுத்தபடியாக ஐதராபாத்திற்கும் சென்று முக்கியவத்துவம் வாய்ந்த காட்சிகளை படமாக்கப் போகிறாராம்.