கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது | லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ் | கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ் | மரகதமலை: பெண் இயக்குனரின் பேண்டசி படம் | 'டெக்ஸ்லா' கதை இதுதானா? | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் ஜோடியாக நடிக்க மறுத்த சந்திரகாந்தா | பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் |

விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், கங்கனா ரணவத், அரவிந்த்சாமி, சமுத்திரக்கனி, நாசர், பூர்ணா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தலைவி'.
மறைந்த முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், தற்போது படத்திற்குப் புதிதாக சில பிரச்னைகள் வந்துள்ளது.
இப்படத்தின் தமிழ், ஹிந்தி ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகிய தளங்களுக்கு விற்றுள்ளார்கள். தியேட்டர்களில் வெளியான இரண்டு வாரங்களில் படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என அவர்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். இரண்டு வாரங்களில் ஓடிடியில் வெளியாகும் படத்தை நாங்கள் ஏன் தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என தியேட்டர்காரர்கள் கேள்வி கேட்கிறார்களாம்.
குறைந்தபட்சம் ஒரு மாத காலம் கழித்துத்தான் ஓடிடிக்களில் படங்களை வெளியிட வேண்டும் என்பதுதான் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. எனவே, இது தொடர்பாக இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட உள்ளது.
இதனிடையே, மஹாராஷ்டிரா மாநிலத்தைத் தவிர மற்ற மாநிலங்களிலதான் 'தலைவி' படத்தின் ஹிந்தி பதிப்பு வெளியாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குப் பிறகுதான் அம்மாநிலத்தில் தியேட்டர்களைத் திறக்கும் முடிவில் இருக்கிறதாம் அம்மாநில அரசு. அதற்குள் 'தலைவி' படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆகிவிடும் என்கிறார்கள்.