மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
ஆடுகளம், பொல்லாதவன், அசுரன் என தொடர்ந்து வெற்றிப்படங்களையே கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு வடசென்னை மிக முக்கியமான படமாகும். அதில் அன்புவாக தனுஷூம், ராஜனாக அமீரும் நடித்திருந்தனர். இருவரின் கேரக்டரையும் அழுத்தமாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் வெற்றிமாறன். வடசென்னை படத்தின் கதையே ராஜனின் கதாபாத்திரத்தில் இருந்து தான் துவங்கும்.
தன் மக்களின் அடிப்படை வாழ்வுக்காகவும், தங்கள் நிலத்துக்காகவும் போராடிய ராஜன், எப்படி வன்முறை உலகத்துக்குள் போனார், அதிகாரப் போட்டியால் நண்பர்களாலேயே எப்படி கொல்லப்பட்டார் என்பதை விளக்கியது 'வடசென்னை' படம். பெரிய ஹிட்டான இப்படத்தின் இரண்டாம் பாகம் அன்புவின் எழுச்சியாக இருக்கும் என கூறப்பட்டது. அதற்கு முன்னதாக வடசென்னை முதல் பாகத்தின் கதைக்கு முன்பாக அதாவது, ராஜன் கதாபாத்திரத்தையும், வாழ்வையும் மையமாக வைத்து ராஜன் வகையறா என்னும் வெப்சீரிஸை வெற்றிமாறன் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்த கென் கருணாஸ், இந்த வெப் சீரிஸில் ராஜனின் மகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கென கென் கருணாஸுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது விடுதலை, வாடிவாசல் படங்களை கைவசம் வைத்துள்ள வெற்றிமாறன், அந்த படங்களை முடித்ததும் இதற்கான பணியில் இறங்குவார்.