ரோஜா சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் | மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சசிகுமார் | நான் உங்கள் ரசிகன் : வில்லன் நடிகரை குஷிப்படுத்திய விஜய் | ‛தாமி' படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் தமிழ் கதாநாயகி சுவிதா | வெப்சீரிஸ் இயக்கும் அருண்ராஜா காமராஜ் | வித்யாபாலனை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பிரதீப் சர்க்கார் காலமானார் | இரண்டிரண்டு நாயகர்ளுடன் பத்து தல Vs விடுதலை | திருமணத்திற்குப் பிறகு கிளாமர் நடனத்தில் சாயிஷா | படப்பிடிப்பில் அக்ஷய் குமாருக்கு விபத்து : அதிர்ச்சியில் ரசிகர்கள் | நல்ல படங்கள் இல்லை, தடுமாறும் தியேட்டர்கள், பல காட்சிகள் ரத்து |
இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இன்று ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் 'கசடதபற'. இந்தியாவில் சோனி லிவ் ஓடிடி தளம் மூலமும், இந்தியாவைத் தவிர வெளிநாடுகளில் இயக்குனர் வெங்கட் பிரபு புதிதாக ஆரம்பித்த 'பிளாக் டிக்கெட் சினிமாஸ்' என்ற இணையதளம் மூலம் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்.
பொதுவாக ஒரு படம் ஓடிடி தளத்தில் வெளியானால் நள்ளிரவிலோ அல்லது முந்தைய தினம் இரவிலோ வெளியிடுவார்கள். பகலில் வெளியிடும் படங்களை வெளியாகும் நேரத்தைக் குறிப்பிட்டு வெளியிடுவார்கள்.
ஆனால், 'கசடதபற' படத்தை இதுவரை எத்தனை மணிக்கு வெளியிட உள்ளோம் என்று சோனி லிவ் தளம் அறிவிக்காமல் உள்ளது. இதனிடையே, நேற்று மாலையே இப்படத்தின் பைரசி பிரின்ட் டெலிகிராமில் வெளியாகிவிட்டது என பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
வழக்கம் போல நள்ளிரவில் சோனி லிவ் நிறுவனம் படத்தை வெளியிட்டதாகவும், ஆனால், பின்னர் நீக்கிவிட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தியதற்காக வெளிப்புற படப்பிடிப்பு நிறுவனத்திற்குத் தர வேண்டிய கட்டணத் தொகையை வெங்கட் பிரபு அளிக்கவில்லையாம். அதனால், அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்ததாகவும், எனவே, படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காலையில் இது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அதில் தீர்வு ஏற்பட்ட பிறகுதான் படம் மீண்டும் வெளியாகும் என்கிறார்கள்.
அதே சமயம் படத்தின் பைரசி லின்க்குகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதன் காரணமாக சோனி லிவ் நிறுவனத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கிறார்கள்.