ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க பல கோடி ரூபாய் செலவில் இரண்டு பாகங்களாகத் தயாராகி வரும் படம் 'புஷ்பா'. ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது.
இதனிடையே, கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் அறிவிப்பு முதல் பார்வையுடன் இந்த மாதத்தில் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் பின்னணியில் எரிந்து கொண்டிருக்கும் காடு, கையில் ஒரு கம்புடன் சாதாரண லுங்கி, அழுக்கு சட்டை, ரப்பர் செருப்பு அணிந்த ஒருவராக சிம்பு நின்று கொண்டிருக்கும் போஸ்டர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அடுத்து இன்று இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இதில் ஒரு பத்துக்குப் பத்து அறைக்குள் லுங்கி, பனியனுடன் கூலித் தொழிலாளர்கள் போல சிலர் அமர்ந்து கொண்டும், தூங்கிக் கொண்டும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, சிம்பு எதையோ யோசித்துக் கொண்டிருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
படத்தின் தலைப்பே இது காட்டின் பின்னணியில் உருவாகும் ஒரு படம் என்பதை உணர்த்தியிருக்கிறது. இதுவரை வெளியாகியுள்ள போஸ்டர்களைப் பார்த்தால் செம்மரக் கடத்தலைப் பற்றித் தயாராகி வரும் 'புஷ்பா' படம் போலவே இந்தப் படமும் வேறு ஒரு கடத்தலைப் பற்றிய படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுதம் மேனன் இதுவரை கிராமமும், கிராமம் சார்ந்த கதையை இயக்கியதேயில்லை. முதல் முறையாக அந்தக் களத்தை அவர் தொட்டிருக்கிறார். அப்படி என்னதான் சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இரண்டு போஸ்டர்கள்.