பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் ஹிந்தி பாடல்கள் | பிளாஷ்பேக் : பவுத்த மத பின்னணியில் உருவான 'அசோக்குமார்' | 'தி ஸ்மைல் மேன்' மூலம் திரும்பி வந்த சிஜா ரோஸ் | 2024ன் கடைசி வாரம்… 10 படங்கள் ரிலீஸ் | 'கேம் சேஞ்சர்' படத்திற்கு புதிய சிக்கல் | 'டேபிள் பிராபிட்' பார்த்த விக்ரமின் ‛வீர தீர சூரன்' | தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள் ரத்தாகுமா? | 2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா |
இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். கம்யூனிச சிந்தனைகளை படமாகி வந்த அவர் கடைசியாக விஜய் சேதுபதி , சுருதிஹாசன் நடிப்பில் லாபம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வந்தபோது திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக எஸ்பி.ஜனநாதன் இறந்துவிட்டார்.
டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை 7 ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார். லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் இந்த படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டதால் லாபம் படத்தை வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.