லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். லாக்டவுன் காரணமாக அவ்வப்போது இடைவெளி விடப்பட்ட இப்படத்தின் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூன்று பேருமே நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள சில தினங்களுக்கு முன்பே சமந்தா சென்றுவிட்ட நிலையில் இப்போது நயன்தாராவும் கலந்து கொண்டுள்ளார்.
இதற்கிடையே மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் தி பேமிலி மேன் 2 வெப்சீரிஸில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்ற சமந்தாவுக்கு நயன்தாரா கட்டியணைத்து வாழ்த்து கூறியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவை, கேக் வெட்ட வைத்து, நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ்சிவன், நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்டோர் வாழ்த்து கூறினர். அதையடுத்து கேக் வெட்டி அவரை படக்குழு வரவேற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.