'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
மாஸ்டர் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக சீரியல் நடிகையும், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான ஷிவானி நாராயணன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் பல ரசிகர்களும் தங்களது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர். விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும், அவருடன் நடிக்க பல முன்னணி நடிகைகள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்கும் போது இன்னும் சினிமாவில் அறிமுகமாகாத ஷிவானி நடிப்பது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
மேலும், சமூக வலைத்தளங்களில் படுகிளாமராக போஸ் கொடுத்து தன்னை ஒரு கிளாமர் நடிகையாக அடையாளம் காட்ட முயற்சித்து வருபவர் ஷிவானி என்று சொல்பவர்களும் உண்டு.
இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராத நிலையில் ரசிகர்கள் வெளியான தகவல்களை வைத்து இப்படி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுவது கமல்ஹாசன் நடிக்கும் ஒரு படத்திற்குத் தேவையில்லாதது என்று கமல்ஹாசன் ரசிகர்களும் கவலைப்பட்டு வருகின்றனர்.