பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! | சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்! | விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா! | சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம் | 'இறுகப்பற்று' படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி | ‛சப்தம்' படப்பிடிப்பு நிறைவு | சின்னத்திரை தொடரில் நடிக்கிறார் சித்தார்த் |
ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது. கியாரா அத்வானி நாகியாக நடிக்கும் இப்படத்தில் அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்க, தில்ராஜூ இப்படத்தை தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது.
தற்போது இப்படத்தில் கதைக்கு திருப்புமுனை தரும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க சில நடிகைகளின் பெயரை பரிசீலனை செய்து வந்த டைரக்டர் ஷங்கர், இப்போது தமன்னாவை தேர்வு செய்துள்ளாராம். அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு 2012ல் ராம்சரண் - தமன்னா ஜோடி ரச்சா என்ற ஹிட் படத்தில் நடித்துள்ளனர்.