பிஸியான கோமல் சர்மா | ஹன்சிகாவின் 50 வது பட வெளியீட்டு தேதி அறிவிப்பு : இதுவாவது நடக்குமா? | பில்கேட்சை சந்தித்த மகேஷ்பாபு | இந்தியாவின் மிஸ்டர்.கிளீன் : சினிமா ஆகிறது வாஜ்பாய் வாழ்க்கை | பாலிவுட்டில் அறிமுகமாகும் மதுமிதா, அர்ஜூன்தாஸ் | அம்மன் தொடருக்கு விரைவில் எண்ட் கார்டு? | ஆர்ஜே ஆனந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள் | மருத்துவமனையில் பாண்டியன் ஸ்டோர் ஹேமா - என்ன ஆச்சு? | ரசிகர்களுக்காக முடிவை மாற்றிய சிபு சூரியன் | ஓடிடி ரிலீஸ் : தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு |
சினிமா உலகில் 62 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். தற்போது கமல், லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.
விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், கமலின் 62 ஆண்டுகள் சினிமா பயணத்தை வாழ்த்தும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கையில் பெரிய வாளுடன் கமல் நிற்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.