மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ராதிகா சரத்குமார், சினிமாவில் அறிமுகமாகி நேற்றுடன் 43 வருடங்கள் நிறைவடைந்தது. 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களிலும், தமிழில் பல டிவி தொடர்களிலும் நடிகை ராதிகா நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் படத்தில் ராதிகா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராதிகாவின் 43 வருடம் நிறைவை ஒட்டி படக்குழு சார்பில் பெரிய கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.இதன் படப்பிடிப்பு இடைவேளையில் பாட்டு பாடி உற்சாகமாக கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடி இருக்கிறார்கள். இதையடுத்து படக்குழுவினர் அனைவரும் ராதிகாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.