தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் போலீசாக நடிக்கும் படம் 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக விக்ரம் படப்பிடிப்பு ஆரம்பமானது. லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் சொல்ல, கமல் நடிக்க, க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்தார். சென்னையில் நடந்த முதல்நாள் படப்பிடிப்பில் கமலுடன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். புஷ்பா படத்தின் ஷுட்டிங்கில் இருந்ததால் பகத் பாசில் கலந்து கொள்ளவில்லை. புஷ்பா ஷுட்டிங் முடிந்த பின் அவர் படப்பிடிப்பில் இணைந்து கொண்டார். விக்ரமின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 முதல் காரைக்குடியில் தொடங்க உள்ளது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. செப்டம்பர் 2 வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.