இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
ராஜா ராணி, திருமணம் என்னும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்த நஸ்ரியா 2014 ம் ஆண்டில் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நட்சத்திர தம்பதிகளில் முக்கியமானவர்கள். இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் ரசிகர்களை கவரும் விதத்தில் இருக்கும். அதோடு தனது படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நஸ்ரியா அவ்வப்போது வீடியோக்களையும் பதிவிடுவார்.
சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்கிஸைத் துவங்கியுள்ளார். இந்நிலையில் பகத் பாசில் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அதற்கு வாழ்த்து கூறி நடிகை நஸ்ரியா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் 'எப்போதும் புகைப்படத்தில் அவுட் ஆப் போகசில் இருக்க விரும்புவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்'. உங்களுடைய எல்லா கனவும் நிஜமாகட்டும்' என்று அழகாக பதிவிட்டுள்ளார்.