ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் | மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி |

தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என நடித்து வருபவர் ராணா டகுபட்டி. 'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர். அதற்கு முன்பாகவே சில காதல் கிசுகிசுக்களால் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர். அவருக்கும் அவரது தங்கையின் தோழியான மிஹிகாவுக்கும் கடந்த வருடம் இதே நாளில் திருமணம் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர், நண்பர்கள் கலந்து கொள்ள அவர்களது திருமணம் நடைபெற்றது. இன்று தங்களது முதலாவது திருமண நாளை இருவரும் கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு பல சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தங்களது திருமண நாளை முன்னிட்டு கணவர் ராணாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, மிஹிகா, “என்னுடைய அன்புக்குரியவருக்கு இனிய ஆண்டு விழா. இது மிகவும் மகிழ்ச்சியான ஆண்டு. இந்த உலகம் இருக்கும் வரையிலும், அதற்கு மேலும் உன்னை நேசிக்கிறேன். நீங்கள் நீங்களாகவும், மிகவும் அற்பதமான மனிதராகவும் இருப்பதற்கு நன்றி. இன்னும் நிறைய வாழ்நாள் இருக்கிறது. நாம் இருவரும் அருகில் இல்லாத வரையில், இது ஒரு கவுண்ட் டவுன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராணா மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். சினிமாவைப் பொறுத்தவரையில் 'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கில் மட்டும் ராணா நடித்து வருகிறார்.