ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
அருண் விஜய் ஹீரோவாக ஜெயிக்க தடுமாறிக் கொண்டிருந்தபோது மகிழ் திருமேனி இயக்கிய தடையறத் தாக்க படம்தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த கூட்டணி கொடுத்த இரண்டாவது படம் தடம். இதில் அருண் விஜய் இரண்டு வேடத்தில் நடித்திருந்தார். இந்த படமும் அருண் விஜய்க்கு திருப்புமுனை படமாக அமைந்தது.
படத்தில் அருண் விஜய்யுடன் வித்யா பிரதீப், தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அருண் ராஜ் இசையமைத்து இருந்தார். இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ரெட் என்ற பெயரில் உருவானது. இதில், ராம் பொத்தினேனி, நிவேதா தாமஸ், மாளவிகா சர்மா, அமிர்தா ஐயர் ஆகியோர் நடித்திருந்தனர். கிஷோர் திருமலா இப்படத்தை இயக்கி இருந்தார்.
தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் அருண் விஜய் வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் வர்தன் கேட்கர் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.