தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகரும், அமெரிக்கா பாடகருமான நிக் ஜோனஸைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டார். நியூயார்க் நகரத்தில் பிரியங்கா சோப்ரா 'சோனா' என்ற ரெஸ்ட்டாரென்ட்டை சில வாரங்களுக்கு முன்பு திறந்தார்.
அந்த ஹோட்டல் பற்றி அடிக்கடி அவருடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். அந்த ஹோட்டலுக்கு நேற்று நிக் ஜோனஸ் அவருடைய சகோதரர் கெவின் ஜோனஸ் உடன் சென்றுள்ளார். அங்கு சில சுவையான உணவுகளை சாப்பிட்டுள்ளார். அது பற்றிய தகவலை புகைப்படங்களுடன் 'சோனா' ரெஸ்ட்டாரென்டின் பார்ட்னரான மனீஷ்க் கோயல் வெளியிட்டுள்ளார்.
“உங்கள் அருமை சகோதரர் கெவின் ஜோனஸ் உடன் வந்ததற்கு நன்றி நிக்கி ஜோனஸ். நாம் ஏற்கெனவே பேசியபடி சோனாவில் ருசியான உணவும், உணர்வும் இருக்கும். இந்த சந்திப்பில் பிரியங்கா, உங்களை மிஸ் செய்கிறோம்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரியங்கா சோப்ரா தற்போது லண்டனில், அமேசான் பிரைம் தளத்திற்காக 'அவெஞ்சர்ஸ்' புகழ் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.