'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் | தெலுங்கில் நஷ்டத்திலிருந்து தப்பிக்கும் 'வாரிசு' | பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள ஷாரூக்கான் | தலைக்கூத்தல் மூலம் தமிழுக்கு வரும் பெங்காலி நடிகை | வறுமையில் வாடும் இயக்குனர் ‛குடிசை' ஜெயபாரதி | ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் |
'மாநகரம், கைதி, மாஸ்டர்' ஆகிய படங்களுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் 'விக்ரம்'. இதுவரை 'மாஸ்டர்' லோகேஷ் கனகராஜ் என்று குறிப்பிடப்பட்டு வந்த லோகேஷ் இப்போதைக்கு 'விக்ரம்' லோகேஷ் கனகராஜ் ஆக மாறிவிட்டார்.
கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கமல்ஹாசன் மகனாக நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
அதை தற்போது படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார். “மிகவும் திறமைசாலியான காளிதாஸை எங்களது ஆக்ஷன் கிளப்பிற்கு வரவேற்கிறோம்,” என பாராட்டி அழைத்துள்ளார்.
'ஒரு பக்கக் கதை' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான காளிதாஸ் மலையாளப் படங்களில் முத்திரை பதித்தாலும் தமிழில் சரியான ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார். அப்படியான வாய்ப்பாக 'விக்ரம்' படம் அவருக்குக் கிடைத்திருக்கிறது.