திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? |
அசோக் செல்வன், அபி ஹாசன், மணிகண்டன், பிரவீன் ராஜா, ரிய்த்விகா, அஞ்சு குரியன், ரியா, நாசர், இளவரசு, பானுப்ரியா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ள படம் சில நேரங்களில் சில மனிதர்கள். அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்.
படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: இரண்டு நாளில் நடக்கும் ஹைப்பர்லிங்க் கதை. ஒரே சம்பவத்தில் சம்பந்தப்படும் வெவ்வேறு மனிதர்களின் தனித்தனி கதை. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் நாம் அன்றாடம் சந்திப்பவர்களாக இருப்பார்கள். இதனால் பார்வையாளர்கள் படத்தோடு தங்களை பொருத்திக் கொள்வார்கள். அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் புதுமுக இயக்குனரின் படம் என்று பார்க்காமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார்கள்.
விக்ரம் வேதா படத்திற்கு வசனம் எழுதிய மணிகண்டன், இப்படத்திற்கான வசனங்களை எழுதியுள்ளார். கே.டி (எ) கருப்புதுரை படத்தில் பணியாற்றிய மெயேந்திரன் கெம்புராஜ் இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும், அர்ஜுன் ரெட்டி புகழ் ராதன் இசை அமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர். படப்பிடிப்பை ஜனவரி மாதமே தொடங்கி விட்டோம். கொரோன 2வது அலையால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தோம். இப்போது மீண்டும் பணிகளை தொடங்கி உள்ளோம். என்றார்.