'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜே பாவ்னா இன்ஸ்டாகிராமில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் சிறந்த தொகுப்பாளரான விஜே பாவனா தனது திறமையால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளை தமிழில் தொகுத்து வழங்கும் வாய்ப்பை பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கிரிக்கெட் போட்டிகளை தமிழில் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களில் இடம் பெற்றிருக்கும் ஒரே பெண் பாவனா தான். அந்த அளவுக்கு தனது துறையில் ஆளுமை செலுத்தும் அவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.
பாவனா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் நடனமாடி வீடியோவை வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தாவுடன் புடவையில் அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை ஆட வைத்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவை பலரும் வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.
பாவனா அந்த வீடியோவில் வேட்டியை மடித்துக் கட்டி, சட்டையை உயர்த்திக் கட்டிக்கொண்டு தர லோக்கலான குத்தாட்டம் ஒன்றை போட்டிருக்கிறார். இணையத்தில் வைரலாகும் வீடியோவை பார்த்துவிட்டு அவருடைய ஹேட்டர்ஸ் மொக்கை டான்ஸ் என்று கலாயத்தாலும், அவரது ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.