அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு ஆராதானா என்ற மகள் உள்ளார். தற்போது இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுப்பற்றி சிவகார்த்திகேயன் டுவிட்டரில், ‛‛18 ஆண்டுகளுக்கு பின் இன்று(நேற்று) என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக...என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்'' என குறிப்பிட்டு தன் அப்பா போட்டோ உடன் பிறந்த குழந்தையின் விரலை தான் பற்றியபடி இருக்கும் ஒரு போட்டோவையும் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பயதிருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.