'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை என மக்களை அதிகமாகவே வாட்டி வதைத்தது. இதனால் தங்கள் உடல் நலன் மீது மக்களுக்கு அதிக அக்கறை வந்தது. வாக்கிங் போகாதவர்கள் கூட வாக்கிங் போக ஆரம்பித்தார்கள். உடற்பயிற்சி செய்யாதவர்கள் கூட உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார்கள்.
இன்னொரு பக்கம் பெட்ரோல் விலை உயர்வும் ஒரு லிட்டருக்கு 100 ரூபாயை கடந்தது. அதன் காரணமாக பழையபடி மக்களும் சைக்கிளில் செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த மாற்றமும் ஒரு விதத்தில் நல்லது தான். சைக்கிளிங் செல்வதற்காக தனியாக நேரத்தை ஒதுக்காமல் மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு பதிலாக சைக்கிளில் சென்று வந்தால் அது உடற்பயிற்சியாகவும் மாறிவிடும்.
கடந்த வாரம் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சைக்கிளிங் பற்றி பதிவிட்டது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது தமிழ் சினிமாவின் சீனியர் நாயகிகளில் ஒருவரான திரிஷாவும் தன்னுடைய சைக்கிளிங் ஆரம்பித்துள்ளார்.
"இதுதான் என்னுடைய புதிய சைக்கிள். நல்ல மூடுக்கு ஒரு ரைட் போதும்", என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரிஷாவை பார்த்து இனி பலரும் சைக்கிளிங் செல்ல ஆரம்பிப்பார்கள்.